டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்..! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது 55 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
அவரது பிறந்தாநாளுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர், “மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் ஆண்டு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.