இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு.! பலி எண்ணிக்கை 60ஐ தாண்டியது.!

Himachal Pradesh - Landslide

மேகவெடிப்பு காரணமாக இமாச்சல் பிரதேஷம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக இமாச்சல் பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் ஏற்பட்ட இரண்டு நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் இவர் இமாச்சல பிரதேசத்தில் டோராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கங்கை. யமுனை போன்ற ஆறுகள் நிரம்பி வருகின்றன. நீர்நிலைகள் மீண்டும் நிரம்பி வெள்ள அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளதால் டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்