இவரது மறைவு தேசத்தின் பேரிழப்பாகும் – பிரதமர் மோடி
டாக்டர் பிந்தேஷ்வர் பதக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், டாக்டர் பிந்தேஷ்வர் பதக் ஜியின் மறைவு நமது தேசத்திற்கு ஒரு ஆழமான இழப்பாகும். சமூக முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அவர் பாடுபட்டவர்.
பிந்தேஷ்வர் ஜி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை தனது பணியாகக் கொண்டார். அவர் ஸ்வச் பாரத் மிஷனுக்கு மகத்தான ஆதரவை வழங்கினார். எங்களின் பல்வேறு உரையாடல்களின் போது, ஸ்வச்சதாவின் மீதான அவரது ஆர்வம் எப்போதும் தெரிந்தது.
அவரது பணி தொடர்ந்து பலரை ஊக்குவிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.
The passing away of Dr. Bindeshwar Pathak Ji is a profound loss for our nation. He was a visionary who worked extensively for societal progress and empowering the downtrodden.
Bindeshwar Ji made it his mission to build a cleaner India. He provided monumental support to the… pic.twitter.com/z93aqoqXrc
— Narendra Modi (@narendramodi) August 15, 2023