கல்வி நிலையங்களில் சாதி பெயர் நீக்க கோரி ஐகோர்ட்டில் மனு!
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெயர்களுடன் சாதி பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், இதனை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.