தமிழக சிறையில் இருந்து 19 கைதிகள் விடுதலை…!
இன்று இந்தியா முழுவதும் 77-வது சுதந்திர தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், சிறையில் இருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 66% தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர்-4, திருச்சி- 3, வேலூர் சிறையில் 2 பேர் என மொத்தம் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.