தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி…!
இன்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குடியரசு தலைவரின் ட்விட்டர் பக்கத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். கடமையின் போது மகத்தான தியாகம் செய்த துணிச்சலான நெஞ்சங்களுக்கு தேசம் தலை வணங்குகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
President Droupadi Murmu visited the National War Memorial on the occasion of 77th Independence Day and paid homage to the martyrs. The nation salutes the bravehearts who had made supreme sacrifice in the line of duty. pic.twitter.com/LKo8Iotwy5
— President of India (@rashtrapatibhvn) August 15, 2023