சாதி ரீதியிலான படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்கிறார்.! அண்ணாமலை விமர்சனம்.!

Annamalai BJP State president

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி,  திருநெல்வேலி கடந்து தற்போது கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மஹாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வன்முறையை தூண்டும் படங்களை ரெட் ஜெயண்ட் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுக்கிறார். வன்முறையை தூண்டும் படியான சாதிய படங்களை முதல்வர் பாராட்டுகிறார்.

சாதிய ரீதியிலான குற்றங்களுக்கு சட்டங்கள் கடுமையாக இயற்றப்பட வேண்டும். 2047இல் இந்தியா வல்லரசாக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்