#BREAKING : ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து…!
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நடைபெற இருந்தது. இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் தேநீர் விருந்துக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.