அரசியல் சாசனத்தின் எதிரி எங்களின் எதிரியே! – சு.வெங்கடேசன் எம்.பி
77வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் மாளிகையிலிருந்து சுதந்திரதின வரவேற்பு அழைப்பிதழ் வந்துள்ளது. “ மாற்றத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளனர். மாற்றத்தக்கதல்ல… ஆனால் நிராகரிக்கத் தக்கது. “வருகையை உறுதிசெய்ய சொல்லியுள்ளனர். எங்களின் எதிர்ப்பை உறுதி செய்கிறோம். அரசியல் சாசனத்தின் எதிரி எங்களின் எதிரியே!’ என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகையிலிருந்து
சுதந்திரதின வரவேற்பு அழைப்பிதழ் வந்துள்ளது.“ மாற்றத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாற்றத்தக்கதல்ல… ஆனால் நிராகரிக்கத் தக்கது.
“வருகையை உறுதிசெய்ய சொல்லியுள்ளனர்”
எங்களின்
எதிர்ப்பை உறுதி செய்கிறோம்.அரசியல் சாசனத்தின் எதிரி
எங்களின் எதிரியே! pic.twitter.com/ViRhhysXk4— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 14, 2023