நாட்டுமக்களுக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின வாழ்த்து..!
நாளை நாடு முழுவதும், 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.
அந்த உரையில், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய குடிமகன் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. சுதந்திர தினம் என்பது நமது அடையாளங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் சமமானவர்கள் இந்த மண்ணில் சம வாய்ப்பு, உரிமைகள் கடமைகள் உள்ளன.
அனைத்து துறைகளிலும் பெண்கள் பெருமளவில் பங்களித்து நாட்டின் பெருமை அதிகரித்து வருகின்றனர். கொரோனா உள்ளிட்ட கடினமான சூழலில் அனைத்து தரப்பினருக்கும் உத்வேகமாக இந்தியா திகழ்ந்தது. உலகம் முழுவதும் மனிதாபிமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அரங்கில் இந்தியா சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.