நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்!
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன.
நீட் விலக்கு மசோதாவை அமல்படுத்துவதில் உள்ள ஒவ்வொரு நாள் தாமதமும் தகுதியான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்கிறது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாது மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக நீட் தேர்வு அமைகிறது. 2021 செப்.13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு செப்.18ம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2021 செப்டம்பரில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு தற்போது வரை ஒப்புதல் கிடைக்கவில்லை. நீட் தேர்வால் இதுவரை 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து இருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டியிருக்காது. குடியரசு தலைவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நீட் தேர்வு எழுதுவதற்கு அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி வேண்டியுள்ளதாகவும், அடிப்படையிலேயே ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு, விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் கடிதம்.#CMMKSTALIN #TNDIPR@rashtrapatibhvn @CMOTamilnadu pic.twitter.com/YFSbtye6ke
— TN DIPR (@TNDIPRNEWS) August 14, 2023