இளைஞர்களின் நலனைப் பாதுகாக்க இந்த ஆன்லைன் விளையாட்டு தடைச் சட்டம்..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!

Online Games Case on Madras high court

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில் சட்டம் இயற்றப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தின்படி, சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும், 32 பேர் தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ள நிலையில் அவசியம் ஏற்பட்டதன் அடிப்படையில் தான் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு முன் விசாரிக்க்கு வந்தது. இதில் ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தில், ஆன்லைனில் விளையாடுபவர்கள் வழக்கு தொடரவில்லை. ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் தான் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளன. கிளப்புகளுக்கு வெளியே ரம்மி விளையாடுவதற்கு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளம்புகளில் ரம்மி உள்ளிட்டவை மாலை நேரங்கள் மட்டுமே விளையாடப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் 24 மணி நேரமும் விளையாடுவதால் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை கருத்தில் கொண்டு இந்த தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.

மேலும், கவர்ச்சியான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த ஆன்லைன் விளையாட்டு தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

இதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்