“அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது செய்யவில்லை”- அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று அமலாத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதுவும், அசோக்குமாரை இன்று மாலையில் சென்னை அழைத்து வந்து, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்றும் கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கைதை மறுத்துள்ள அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. அதன்படி, ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை அசோக்குமாருக்கு 4 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறியுள்ளது.
இதில், அசோக்குமாரின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் அடங்குவர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் கரூரில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. பின்னர் செந்தில் பாலாஜி கைது தொடர்ந்து, கரூரில் மீண்டும் சமீபத்தில் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.
இதன்பின் அசோக்குமார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சமயத்தில் தான் நேற்று பணமோசடி செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கொச்சியில் கைதானதாக தகவல் வெளியான நிலையில், இதனை மறுத்துள்ளது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.