அதிர்ச்சி..! ஹிமாச்சல் நிலச்சரிவு – 8 உடல்கள் கண்டெடுப்பு..!
ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் கடந்த 48 மணி நேரமாக அதீத மழை பெய்து வந்துள்ளது. இந்த நிலையில் சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை 8 கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 25 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், 8 பேரின் உடல்கள் மட்டுமே சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆய்வு செய்தார். இதனை அடுத்து, ஆற்றங்கரை ஓரம் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.