எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளிநடப்பு..!

Default Image

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாதது ஏன் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு செய்தது.

கவர்னர் பெண் பாத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து நடிகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக முக நூலில் பதிவு செய்திருந்தார். அவர் மீது பத்திரிகையாளர் சங்கங்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன் ஜாமின் ரத்தான நிலையில் இதுவரை எஸ்.வி.சேகர் சுதந்திரமாக உலா வருகிறார்.

இது குறித்து இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், எஸ்.வி.சேகர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதியில்லை என தெரிவித்தார். எஸ்.வி.சேகரை வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 20-ம் தேதிக்கு பின் இது குறித்து விவாதிக்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்து ஸ்டாலின் பேச அனுமதிக்க மறுத்தார். இதைக்கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கூறியதாவது:

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், இது குறித்து பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் நீதிமன்றம் சென்றார். அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நடிகர் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக இருக்கிறார், அவரை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால் அவர் சுதந்திரமாக உலா வருகிறார். கடந்த 10-ம் தேதி சின்னத்திரை சங்கம் தேர்தலில் வாக்களித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் போலீஸ் துணையுடன் வாக்களித்துள்ளார். அங்கு ஏராளமான அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் இருந்தும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை’’ என ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin