உணவு என்பது தனிப்பட்ட உரிமை.! ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலடி.!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று இருந்தார். கிரிவலப்பாதை சுற்றிவந்த அவர் கூறுகையில், கிரிவலப்பாதையில் இருக்கும் அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
ஆளுநரின் கருத்துக்கு பலவேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், உணவு என்பது தனிநபர் உரிமை. எதனை சாப்பிட வேண்டும் சாப்பிட கூடாது என மக்களுக்கு அரசு உத்தரவிட முடியாது.
பௌர்ணமி நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள ஹோட்டல்களில் அசைவம் சமைக்கப்படுவது இல்லை என்பதையும் குறிப்பிட்டார். நீட் விலக்குக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ரவி கூறிய கருத்து பற்றி பேசுகையில் ஆளுநர் மத்திய அரசின் கொள்கையினை வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் எனவும் தனது கருத்தை அமைச்சர் ஏ.வ.வேலு குறிப்பிட்டார்.