ஸ்ரீதேவியின் பிறந்தநாளை சிறப்பாக்கிய கூகுள் நிறுவனம்!

sridevi

ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்று பிரபல நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள். அவரது நினைவைப் போற்றும் வகையில், கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என சுமார், 300 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி, பல மொழிகளில் நடித்த நடிகை ஸ்ரீதேவி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

actress Sridevi [Image source : PTI ]

இது பற்றி கூகுள் நிறுவனம், சிறுவயதிலேயே சினிமா மீது காதல் கொண்ட இவர், நான்காவது வயதில் கந்தன் கருணை என்ற தமிழ் படத்தில் நடிக்கத் தொடங்கினார் என்பதை நினைவு கூர்ந்து பாராட்டி வர்ணித்து சிறப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த சிறப்பு டூடுலை மும்பையைச் சேர்ந்த கலைஞர் பூமிகா முகர்ஜி தான் உருவாக்கயுள்ளார்.

துபாயில்,  பிப்ரவரி 24, 2018 அன்று ஸ்ரீதேவியின் அகால மரணம் திரையுலகினரை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்