இந்த சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் – இயக்குநர் மாரி செல்வராஜ்
நெல்லையில், நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்4 நபர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள்2 நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து இயக்குனர் மாரி செவ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்.’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்… pic.twitter.com/XCxkZdJgdv
— Mari Selvaraj (@mari_selvaraj) August 11, 2023