ஜெயிலர் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…! இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி ட்வீட்..!

Tamilnadu CM MK Stalin - Film Director Nelson

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்துடன், ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும், ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஜெயிலர்” படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதல்வருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஜெயிலர் படத்தை பார்த்ததற்கு முதலமைச்சருக்கு மிக்க நன்றி. உங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்