#BREAKING : குட்கா பொருட்கள் விற்பனை – மேலும் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி..!
தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளார்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, மத்திய கலால் அதிகாரி உட்பட 6 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை ஆணையர் உள்ளிட்ட 11 அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில், காவல்துறை அதிகாரிகரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அனுமதி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இந்த அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், குட்கா முறைகேடு வழக்கில் மேலும் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்த கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.