சண்டைக்கு இடம் குறிச்சாச்சு! பிரதமர் கிட்டையும் பேசியாச்சு – எலான் மஸ்க் அதிரடி!

Mark vs Musk

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் சண்டையிடுவதற்கான புதிய விவரங்களை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, இவர்கள் இருவருக்கு இடையான போட்டி இத்தாலியில் நடைபெறும் என தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்வீட்டில், “எங்கள் இருவருக்கு இடையான சண்டையானது என்னுடைய மற்றும் ஜூக்கர் பெர்க்கின் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்படும். அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) நிறுவனத்தின் மூலம் நடைபெறாது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “நாங்கள் சண்டைபோடும் காட்சிகள் இந்த எக்ஸ் (ட்வீட்டர்) இயங்குதளத்திலும், மெட்டாவிலும்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அந்த காட்சிகள் அனைத்தும் பழையகாலத்தில் பார்க்கும் (Ancient Rome) கேமராவில் எடுக்கப்பட்டது போல இருக்கும். இந்த காலத்தில் இருப்பது போல இருக்காது.

இத்தாலி பிரதமர் மற்றும் கலாச்சார அமைச்சரிடம் நாங்கள் இருவரும் சண்டைபோடப்போவது பற்றி பேசினேன். அவர்கள் ஒரு இடத்தில் போட்டியை நடத்தலாம் என கூறியிருக்கார்கள்” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இத்தாலியில் நடக்கவிருக்கும் சண்டையின் சரியான இடத்தை மஸ்க் வெளியிடவில்லை அடுத்ததாக இன்று வெளியிட்டது போல சண்டை நடைபெறவுள்ள இடம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்