#BREAKING : இது மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும் – முதல்வர் ட்வீட்

mk stalin

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,  3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார்.

அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,  3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொள்கிறது. இது மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை.

வரலாற்றின் பிறையில், தமிழகமும் திமுகவும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன.  இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம், தளராத உறுதியுடன் மீண்டும் அதைச் செய்வோம்.

இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்.’ என பதிவிட்டுளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்