இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.! அப்படி என்ன சாதனை தெரியுமா?
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். 37 வயது போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ நவம்பர் 2022 இல் அவர் 500 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றார்.
இந்நிலையில், தற்பொழுது அவர் 600 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை எட்டியுள்ளார். இவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு சுமார் $3.23 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.26 கோடி) வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆண்டு வருமானத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2023ம் ஆண்டில் $136 மில்லியன் வருமானத்தை ஈட்டி அதிக ஆண்டு வருமானம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதைத்தவிர, கடந்த ஜூன் மாதம் 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஆடவர் கால்பந்து வீரர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கால்பந்து வீரர்களில் ஒருவராகப் புகழ் பெற்ற அவர், சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் சேர்ந்து, விளையாடி வருகிறார். டிசம்பர் 2022 இன் இறுதியில் அல்-நாசர் கிளப் ஆனது கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் 200 மில்லியன் டாலர்களுக்கு இரண்டரை ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.