பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக்கொலை..!
உத்தரபிரதேசத்தின் சம்பாலைச் சேர்ந்த 34 வயதான பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி, டெல்லி சாலையில் அமைந்துள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தனது சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போழுது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சவுத்ரி இறந்த செய்தி பரவியதும், எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா உட்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், குற்றவாளிகளைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.