அர்த்தம் தவறாக உள்ளது… பிரதமர் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.! திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்.!

DMK MP TR Baalu - PM Modi

நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடரில், கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் எதிர்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் மத்திய அமைச்சர், பிரதமர் மோடி ஆகியோர் பேசுகையில், தமிழக அமைச்சர் எ.வ.வேலு கூறிய கருத்துக்கள் பற்றி பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்து இருந்ததனர்.

பிரதமர் மோடி குறிப்பிடுகையில், தமிழகம் இந்தியாவில் இல்லை என ஒரு தமிழக அமைச்சர் பேசுகிறார் என விமர்சித்து இருந்தார். பிரதமர் மோடி மற்றும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேச்சுக்களை மக்களவை குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , தமிழக அமைச்சர் எ.வ.வேலு கூறியதை தவறாக புரிந்து கொண்டு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எ.வ.வேலு பேச்சு குறித்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அர்த்தம் வேறாக இருக்கிறது, எனவே அதனை மக்களவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மக்களவை தலைவருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடித்ததோடு, அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ காணொளியையும் இணைத்து மக்களவை தலைவர் வசம் திமுக எம்பி டி.ஆர்.பாலு கொடுத்துள்ளார். இதனை மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு அவை குறிப்பில் இருந்து பிரதமர் மோடி பேச்சு  நீக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்