நிலவின் தென் துருவம்… சந்திராயன்-3க்கு போட்டியாக விண்ணில் பாய்ந்த ரஷ்ய விண்கலம் லூனா-25.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தற்போது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்ட சந்திராயன்-3 விண்கலமானது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ரஷ்யாவும் நிலவின் தென்துருவ பகுதிக்கு தனது லூனா-25 எனும் விண்கலத்தை இன்று அதிகாலை விண்ணில் ஏவியுள்ளது.
சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.11 மணிக்கு விண்ணில் ஏவியது. இதனை ஒரு மணி நேரம் கழித்து, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் உறுதிப்படுத்தியது.
கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா, நிலவின் மீதான ஆராய்ச்சி பணிக்காக விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ள்ளது. ரஷ்யா முதன் முதலாக லூனா-2 விண்கலத்தை 1959 இல் நிலவுக்கு செலுத்தியது. நிலவின் மேற்பரப்பை அடைந்த முதல் ரஷ்ய விண்கலம் லூனா-2 ஆகும். அடுத்து, 1966 இல் லூனா-9 விண்கலமானது நிலவின் மீது மென்மையான தரையிறக்கபட்டது.
அதன் பின்னர் பின்னர் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் ரஷ்யா கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது. மேலும், 1991க்கு பிறகு, ரஷ்யா பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் அறிவியல் ஆய்வுக்காக ரஷ்யா, விண்கலம் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அனுப்பப்பட்ட, லூனா-25யானது, ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்தார். ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், ஆகஸ்ட் 23 தேதி தரையிறங்கும் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் தரையிறங்க ஏதுவான நேரத்தில் நிலவில் லூனா-25 தரையிரங்கும் என கூறப்பட்டுள்ளது.
லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா-25ஐ விண்ணில் செலுத்தியுள்ளது.
Russia launches Luna-25 mission to Moon, its first lunar lander in 47 years
Read @ANI Story | https://t.co/FQBzV9HJJm#Russia #Luna25 #Moon pic.twitter.com/1nKK0s411Z
— ANI Digital (@ani_digital) August 11, 2023