முன்னாள் முதல்வர் சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

N Chandrababu Naidu

ஆந்திர மாநில முன்னாள் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி தொழிலாளி இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சந்திரபாபு மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது 120பி,147,148,153,307,115,109,323,324,506 ஆர்/டபிள்யூ 149 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் அன்னமய்யா மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, மோதல் தொடர்பாக ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் 70 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்காக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது (ரவுடி சீட்) வெளியிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் கோரிக்கை விடுத்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்