4 நாட்களை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர்..! பரிசளித்து வழியனுப்பி வைத்த முதல்வர்…!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். முதன்முதலில் நீலகிரியில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்தார். அதனை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அதன்பின் இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்ற அவர், அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று தனது தமிழக பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வழிய அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கீழடி வரலாறு மற்றும் அகழ்வாய்வு குறித்து ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட காலப்பேழை (Coffee Table) புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியுள்ளார்.
2/2
கீழடி வரலாறு மற்றும் அகழ்வாய்வு குறித்து ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட காலப்பேழை (Coffee Table) புத்தகத்தை வழங்கி வழியனுப்பி வைத்தார்.#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@rashtrapatibhvn@mp_saminathan— TN DIPR (@TNDIPRNEWS) August 8, 2023