பாலியல் குற்றவாளிகள் அரசு வேலையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்..! ராஜஸ்தான் முதல்வர்
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அரசு வேலைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நேற்று இரவு முதலமைச்சரின் இல்லத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நடந்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது, பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களை தடுப்பதே எங்களது முதன்மையான பணியாகும். பாலியல் குற்றவாளிகளின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்று அசோக் கெலாட் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அவர்களின் குணநலச் சான்றிதழில் அவர்களின் குற்றத்தைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியதோடு, இதுபோன்ற வழக்குகளுடன் அவர்கள் வேலைக்கு விண்ணப்பித்தால், அத்தகைய நபர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். என்றும் கூறியுள்ளார்.
மேலும், அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.