‘இந்தியா முழுவதுமே என் வீடு தான்’ – ராகுல் காந்திக்கு மீண்டும் வழங்கப்பட்ட அரசு பங்களா..!

ragul gandhi

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வெளியான நிலையில், அவரது அரசு பங்களாவையும் காலி செய்தனர். இந்த நிலையில், தற்போது இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, தற்போது பழைய அரசு பங்களாவான துக்லக் லென் மீண்டும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல்காந்தி அவர்கள்  கூறுகையில், இந்தியா முழுவதுமே எனது வீடு தான் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்