மணிப்பூர் வன்முறை: பிஷ்ணுபூர் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு – ஆயுதங்கள் மீட்பு!

Manipur riots

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மணிப்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “முயல்ங்காட், டெராகோங்சாங்பி பகுதிகள், கோதோல், போல்ஜாங் மற்றும் குவாக்டா வார்டு எண். 8 ஆகிய பகுதிகளில் ஆயுதமேந்திய மர்மநபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி குற்றவாளிகளை விரட்டியடித்தனர். பின்னர், அருகிலுள்ள பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் 9 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 843 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்த வகையில், அனைத்து பதட்டமான இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிஷுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் லம்காயில் இருந்து அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) படையை திரும்பப் பெற மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை மணிப்பூர் ஏடிஜிபி எல் கைலுன் பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்