50எம்பி கேமரா..5000mAh பேட்டரி..! மோட்டோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்..விலை என்ன தெரியுமா..?

Moto G14

மோட்டோரோலா நிறுவனமானது ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் மோட்டோ ஜி14 (Moto G14) ஸ்மார்ட்போனை, கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

இது 2400 x 1080 பிக்சல் ஹை-ரெசல்யூஷன் கொண்ட 6.5 இன்ச் (16.51 செமீ) அளவுள்ள எஃப்எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மோட்டோ அறிமுகப்படுத்திய மற்ற போன்களை ஒப்பிடும் போது இதில் உள்ள டிஸ்பிளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதில் ஐபி 52 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சம் உள்ளது.

moto g14
moto g14

பிராசஸர்:

மோட்டோ ஜி14 ஆனது ஆர்ம் மாலி ஜி57 எம்பி1 ஜிபியூ (Arm Mali G57 MP1) உடன் இணைக்கப்பட்ட யூனிசோக்கின் T616 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது சாதாரண பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மை யூஎக்ஸ் (My UX) உள்ளது.

moto g14
moto g14

கேமரா:

மோட்டோ ஜி14 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்புறத்தில் 8எம்பி கேமரா உள்ளது.

moto g14
moto g14

பேட்டரி மற்றும் பிற அம்சம்:

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியைக்  கொண்டுள்ளது. இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டூயல் சிம் வசதி உள்ளது. இந்த இரண்டு சிம்களிலும் 4ஜி நெட்ஒர்க்கை பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஒரு 4ஜி மொபைல் ஆகும். இதில் கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஃபேஸ் அன்லாக் ஆகிய அம்சங்களும் அடங்கும்.

moto g14
moto g14

ஸ்டோரேஜ் & விலை:

இந்த ஸ்மார்ட்போன் ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டீல் கிரே என்ற இரண்டு வண்ணங்களில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை 1 டிபி வரை உயர்த்திக்கொள்ளலாம். இதில் மைக்ரோ எஸ்டி கார்டும் சொருக முடியும்.

moto g14
moto g14

மோட்டோ ஜி14 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.9,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்கள் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்