#BREAKING: செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஆக.12 வரை அமலாக்கத்துறை காவல் விதித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். காவல் முடிந்து மீண்டும் 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் ஆணையிட்டுள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜியை விசாரணைக்கு எவ்வாறு அழைத்து செல்கிறீர்களா அதே நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் எடுத்து கொள்வோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவித்தனர். இதுபோன்று, ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறியுள்ளனர்.