அறுவடை முடிந்தபின் நிலத்தை என்.எல்.சி.யிடம் ஒப்படைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து பின், நிலத்தை என்.எல்.சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அறுவடை முடித்து ஒப்படைக்க வேண்டும் எனவும், புதிதாக பயிரிடக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்.எல்.சி நிறுவனம் செய்த தவறு என்னெவன்றால், இரக்கமின்றி விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது தான். இதனால், பயிர்களுக்கான இழப்பீடு தொகையானது 88 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலத்தை கையகப்படுத்திய பின் இழப்பீடு பெற்ற விவசாயிகள் அந்நியர்களாகவே கருதப்படுவர், அவர்களுக்கு அங்கு விவசாயம் செய்ய எந்த உரிமையும் இல்லை. இருப்பினும், விவசாயிகளின் இழப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறுவடை முடித்து நிலத்தை என்.எல்.சி.யிடம் ஒப்படைக்க வேண்டும்.
தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது. ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014ம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.