காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி.! 2 பேர் சுட்டுக்கொலை.!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தெக்வார் செக்டார் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து எல்லையிலேயே ஒருவர் ராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
மேலும் ஒருவர் தப்பியோட முயன்ற போது இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டார். இதனால் எல்லை தாண்ட முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஊடுருவலை தடுக்க முயன்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் அதனால் நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.