கலைஞர் நினைவு தினம் – முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..! கலைஞர் நினைவிடத்தில் மரியாதை..!

Tamilnadu CM MK Stalin open new building

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் தலைமையில், கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில், அமைதி பேரணி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பேரணியில், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

கலைஞர் நினைவிடத்தை தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்தினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைதி பேரணி நடத்த உள்ளோம். உங்களை காண காலையில் அணிவகுத்து வருகிறோம். உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்