மொரொக்கோவில் மினிபஸ் கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு..!

Accident IMG

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில், டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, விபத்துக்கான காரணத்தை கண்டறிய காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் காசாபிளாங்காவின் கிழக்கே பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்