#BREAKING: தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

Droupati murmu

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6ம் தேதி வருவது உறுதியானது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வருகை முன்னிட்டு மசினக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களில் உள்ள 1000த்திற்கு மேற்பட்ட காவல்த்துறையினர் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார்.

தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிறகு ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும்  குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

பின் மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் குடியரசு தலைவருக்கு ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுவதாவும், இந்த விருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்