அண்ணாமலை கத்துக்குட்டியா.? செல்லூர் ராஜு கத்துக்குட்டியா.? பாஜக து.தலைவர் கரு.நாகராஜ் கடும் விமர்சனம்.!  

ADMK Ex Minister Sellur Raju - BJP TN President Annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கூட்டணியில் இருந்து ஒதுக்கவில்லை. என்று கருத்து தெரிவித்து இருந்தார்.  இவரது பேச்சுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலை மாநில தலைவர் மட்டுமே, நாங்கள் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடியிடம் மட்டுமே கலந்து ஆலோசிப்போம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானி பற்றியெல்லாம் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

தற்போது அண்ணாமலை கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் தங்கள் நிலை என்ன என்பதை அறிந்து பேசினால் நன்றாக இருக்கும் எனவும், அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. நான் படிப்படியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ள்ளேன் என குறிப்பிட்டு,

அண்ணாமலை கருத்தை பொறுப்படுத்த வேண்டியதில்லை. நாங்கள் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களிடம் தான் முடிவுகளை எடுப்போம். அதனால் அண்ணாமலை கருத்துக்கள் பற்றியெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என செல்லூர் ராஜு தனது கருத்துக்களை இன்று கூறியுள்ளார்.

செல்லுார் ராஜூ கருத்துக்கு பாஜக தமிழக துணை தலைவர் கரு.நாகராஜ் கூறுகையில், செல்லூர் ராஜு இவ்வளவு நாட்கள் எப்படி அமைச்சராக இருந்தார் என்பது விநோதமாக உள்ளது. செல்லுார் ராஜூ இதுபோன்ற பேச்சுக்களை இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டியா? அல்லது செல்லுார் ராஜூ கத்துக்குட்டியா என்பது மக்களுக்கு தெரியும் என கரு.நாகராஜ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்