விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்டரீதியாக அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.