ஆந்திராவில் ஆளும்கட்சி – எதிர்க்கட்சி மோதல்.! வேலூரில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.!

Vellore bus stand

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாய்டு நேற்று சித்தூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆந்திர மாநில நீர் மேலாண்மை திட்டத்தை மேற்பார்வையிட சென்ற அவரை ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மறித்ததால் அங்கு வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறை, கல்வீச்சு சம்பவங்களால் பலர் காயமடைந்தனர். காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அங்கு நடைபெற்ற வன்முறையில் காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. சித்தூர் பகுதியில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் வேலூர், திருப்பத்தூரில் இருந்து திருப்பதி, சித்தூர் பகுதிக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் இன்று செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பிறகே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பதி செல்ல திட்டமிட்டு இருந்த பலர் ஏமாற்றமடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்