மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிப்பு..!

Manipur riots

 மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே தொடர்ந்து வன்முறை நடந்து வந்த நிலையில், ஒன வன்முறையில் 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவியது.

இந்த நிலையில், இன்று மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மரணங்கள் நிகழாமல் இருந்த நிலையில் தற்போது புதியதாக மூன்று அப்பர் உயிரிழந்துள்ள சம்பவம் மணிப்பூரில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இரண்டு ஆயுதக்கடங்குகளில் ஆயுதங்கள், தோட்டாக்கள் சூறையாடப்பட்ட நிலையில் இந்த வன்முறை நிகழ்வுள்ளதாக கூறப்படுகிறது.  குக்கி இனமக்கள் நடத்திய தாக்குதலில் மெய்தி இனமக்கள் 3 பேர் உயிரிழந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவது அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து வன்முறை மீண்டும் தொடங்கியதால் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இனக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்