மணிப்பூரில் வெடித்த புதிய வன்முறை..! 3 பேர் உயிரிழப்பு..வீடுகள் எரிப்பு..!

Manipurviolence

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே நடந்து வரும் வன்முறையில், 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பிறகு, மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய, மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்தது. மேலும், மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, கமாண்டோ படை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். இதில் இறந்தவர்கள் குவாக்டா பகுதியில் உள்ள மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

புதிய வன்முறை சம்பவத்தில், குக்கி சமூகத்தினரின் பல வீடுகளும் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு பிறகு பிஷ்ணுபூரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்த கமாண்டோ பிஷ்ணுபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்