ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

Nirmala Sitharaman

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் சார்பாக தாமிரபரணி கரையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மேல் கண்ணாடி வேலைகள் பார்வையிடவும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 5 ஏக்கரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, கனிமொழி எம்.பி மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்