கோவாவில் ரூ.5 கோடி போதைப் பொருளை கைப்பற்றிய வருவாய் புலனாய்வு துறை..!
கோவா மாநிலம், சட்டரி தாலுகாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சுமார் 100 கிலோ எடையுடைய, தடை செய்யப்பட்ட கேட்டமைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறை இயக்குனரகம் கைப்பற்றியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து பேசிய அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக இயக்குனர் மேதா தேசாய், இரும்புப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு உரிமம் பெற்றுக்கொண்டு, சட்டவிரோதமாக இந்த தொழிற்சாலையில் கேட்டமைன் போதைப்பொருளை தயாரித்து வந்துள்ளனர்.
தொழிற்சாலை உரிமையாளரிடம் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.