பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் என கூறப்பட்டது. அதன்படி, பழவந்தாங்கல் நங்கநல்லூர் போரூர் அசோக் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
நங்கநல்லூர் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பிறகு பழவந்தாங்கல் காவல் நிலையம் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்த முதல்வர் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.