யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை..! பணிநியமன ஆணையை வழங்கிய முதல்வர்..!
‘The Elephant Whisperers’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி நாடு முழுவதும் பிரபலமாகினர். ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வரும் 5ம் தேதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க, முதுமலைக்கு வருகை தரஉள்ளது குறிப்பிடத்தக்கது.
தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளி அவர்களுக்கு பணி நியமன ஆணை#CMMKSTALIN #TNDIPR #CM_MKStalin_Secretariat@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MMathiventhan pic.twitter.com/6rNyBuJWhC
— TN DIPR (@TNDIPRNEWS) August 2, 2023