எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டதால் பரபரப்பு…!
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. மர்மநபர்கள் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுகவினர்எ, சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.