முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 78 குற்றச்சாட்டு! 100 ஆண்டு சிறை தண்டனை?
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்த போது, தேசிய பாதுகாப்பு அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவர் தேர்தலில் தோற்று ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்கையில் அந்த தேசிய பாதுகாப்பு ஆவணங்களை கொண்டு சென்றதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி பெரிய சர்ச்சையானது. சமீபத்திய நீதித்துறை குற்றச்சாட்டின் மூலம், டொனால்ட் டிரம்ப் இப்போது 78 குற்றச்சாட்டு வழக்குகளை எதிர்கொள்கிறார். இருந்தாலும், ட்ரம்ப் தன்னை ஒரு குற்றமற்றவர் என்று கூறி வருகிறார்.
ஆனால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டு வழக்கிற்கும் அதிகபட்ச தண்டனையாக, நுறு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனையை பெறுவார் போல் தெரிகிறது. அந்த குற்றச்சாட்டுகள் குறித்த பட்டியில் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பாக, டிரம்ப் மீது பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதற்காக 34 குற்றச்சாட்டுகளுக்கு 10 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், தேசிய பாதுகாப்பு அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததற்காக 32 குற்றச்சாட்டுகளுக்கு 4 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு, மொத்தமாக டிரம்ப் மீது 78 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையாக மாறினால், அடுத்த வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க… 78 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள டிரம்ப், ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் தற்பொழுதும் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.