தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் : கோரிக்கை வைத்த மக்கள்..!
தொழிலாளர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தங்களின் வாழ்க்கை தரம் இன்னும் மேம்படாமல் அப்படியே தான் உள்ளது. சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் முதல்-மந்திரியிடம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய குமாரசாமி கூறியதாவது:-
உங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது குறித்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களை அழைத்து பேசுவேன்.
உங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வருகிற 18-ந் தேதி தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவன நிறுவனங்களின் உரிமையாளர்களின் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டம் வெற்றிகரமாக அமையும். இருதரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.